குண்டு குண்டு கன்னமும், பச்சரிசி பல்வரிசையும் கொண்ட இந்த நடிகைக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். 1991 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத கனவு கன்னியாக இருந்த வினிதா குறுகிய காலத்திலேயே உச்சத்திற்கு சென்றார். இவரின் திரை வாழ்க்கை எப்படி சரிந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விசாகப்பட்டினத்தை அடுத்த விஜயநகரை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு, வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பிறந்த செல்ல மூத்த மகள் தான் வினிதா. இவரது இயற்பெயர் லக்ஷ்மி. இவருக்கு சங்கர் என்ற தம்பி உண்டு. அளவான அழகிய குடும்பத்தில் பெற்றோரின் பெரும் அரவணைப்பினாலும் உடன் பிறந்த ஒரே தம்பியின் பாசம் பிணைப்பினாலும் மகிழ்ச்சிகரமாக வளர்ந்து வந்தார் வினிதா.
நடிகை வினிதா: வினிதாவின் தந்தை குவைத் எண்ணை நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது, ஈரான், ஈராக் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரிக்க, அந்நாடுகளில் வேலைக்காக குடியேறியவர்கள் தங்களது சொந்த நாட்டை நோக்கி பயணப்பட்டனர்.
பல தடைகளையும் தாண்டி தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு சுமார் 25 நாட்கள் பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக இந்தியா வந்து மும்பையில் வினிதாவின் குடும்பத்தினர் குடியேறினார்கள். பின் மும்பையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த வினிதா மாடலிங் துறையில் கால் பதித்து ஒரு சில விளம்பரத்தில் நடித்து வந்தார். அப்போது வினிதாவிற்கு மெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்து கொண்டு முதல் சுற்றுக்கு முன்னேறினார். இறுதி சுற்றின் போது இவருக்கு உடல் நலம் பாதிக்க இவரால் இறுதிப்போட்டில் கலந்த கொள்ள முடியாமல் போனது.
வெற்றிப்படங்கள்: இந்த போட்டோக்கள் பத்திரிக்கையில் வெளிவந்த பின் வினிதாவிற்கு தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின் ஊழியன் என்ற படத்தின் மூலம் தமிழில் வினிதா என்ற பெயரில் அறிமுகம் ஆனார். ஆனால், இந்த படம் வெளியாக தாமதமானதால், கட்டபொம்மன் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த படம் முதலில் வெளியானது. அந்த படத்தின் பாடல், கதை என அனைத்து சிறப்பாக இருந்ததால் படம் வசூலை அள்ளியது. இதன் மூலம் வினிதாவிற்கும் நல்ல பெயர் கிடைத்தது. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்த வினிதா, தனது இரண்டாவது படமான சின்ன ஜமீன் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்து போனார். அதன் பின் நிலா, சின்ன மேடம், பதவிப்பிரமாணம், வியட்நாம் காலனி, வேலுச்சாமி, ராஜமுத்திரை, கர்ணா, பெரியகுடும்பம், மாமனிதன், கருப்பு ரோஜா, சிவப்பு நிலா என அடுத்தடுத்து படத்தில் நடித்துள்ளார்.
விபச்சார வழக்கில் கைது: குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த வினிதா, படிப்படியாக இறங்கு முகத்தை சந்தித்ததால், தன்னுடைய தம்பி சங்கரை கதையின் நாயகனாக அறிமுகமாக்க அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்த போது, 2003 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் வினிதா கைதானார். இதுவா வினிதா என்று பார்ப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். விபச்சார வழக்கில் கைதான வினதா, முகத்தை மூடி மறைத்தபடி வந்த போட்டோவும் பத்திரிக்கையில் வெளியாகி ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தம்பியின் திரை உலக பிரவேசத்திற்காக வினிதா தன் வாழ்க்கையை அழித்துக்கொண்டார் என்ற செய்தி பரவியது.
தம்பிக்காக செய்த தியாகம்: பின் ஜாமீனில் வெளியே வந்த வினிதா, அளித்த பேட்டியில், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண்களுக்கு தண்டனையை கிடையாதா என கதறி அழுதார். தனது தம்பியை ஒரு திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக ஒப்பந்தம் செய்யும் வேலைக்காக தம்பி, தாயுடன் தான் நான் அங்கு சென்று இருந்தேன். விபச்சாரம் செய்வதற்காக சென்றால் தம்பியையும், தாயையும் உடன் அழைத்து செல்வார்களா என கேள்வி கேட்டு இருந்தார். வாழ்க்கையே மொத்தமாக முடிந்து போகும் அளவிற்கு விபச்சார வழக்கில் சிக்கிய வினிதாவிற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு, வினிதா குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
எந்த தம்பிக்கான அவமானத்தை சுமந்தாரா அதே தம்பியை வைத்து துள்ளும் காலம் என்ற படத்தை தயாரித்தார். அதன் பின் எங்க ராசி நல்ல ராசி என்ற படத்தோடு தனது திரையுலக பயணத்திற்கு முற்றுப்புள்ள வைத்து, தனிமரமாக தனது குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார் நடிகை வினிதா.