கவிஞர் வாலியின் நினைவு நாள் பதிவு

By மினி சினி

தனக்காக மட்டும் வாழ்கிறவன் தன் வாழ்நாளிலேயே மறக்க படுகிறான் !

தன் குடும்பத்துக்காக மட்டும் வாழ்கிறவன் அவன் வாழ் நாள் முடிந்த பின்பு மறக்க படுகிறான் !

மக்களை கலை மூலம் மகிழ்விக்க பிறந்தவர் அனைவரும் சாகா வரம் பெறுகின்றனர் ....இந்த வாலி சாகா வரம் பெற்றவர்.

அந்த இராமாயண வாலி தன் முன் நிற்பவர் எவராக இருந்தாலும் - அவருடைய சக்தியில் பாதியை எடுத்து கொள்வார் என்று படித்ததுண்டு .... நம்முடன் வாழ்ந்த இந்த வாலி - தன் முன் எவர் வந்து பாடல் கேட்டாலும் தன் சக்திக்கு அப்பாற்பட்டு ஒன்றி போய் படைப்புகளை அள்ளி அள்ளி தந்திருக்கிறார்.

ஒருவர் 55 ஆண்டுகள் உயிர் வாழ்வது அரியது என்கிற சூழலில் - 55 ஆண்டுகள் திரை உலகிற்காக பாடல்களை தந்திருக்கிறார் .   நான்கு தலைமுறை இசை அமைப்பாளர்கள் , பாடகர்கள் , நடிகர்கள் பார்த்தவர் .. அவர் எழுதிய பாடல்கள் சுமார் 1500 க்கு மேல் ..எண்ணிக்கை விட்டு விட்டனர் என்று அறிந்தேன் .. தமிழ் திரை உலகல்லாமல் , தமிழ் இலக்கியத்துக்கும் அவரின் பங்களிப்பு ஏராளம் ..முற்றும் துறந்தவருக்கும் பாட்டெழுதியிருக்கிறார்-அடுத்த நூற்றாண்டை இப்பொழுதே பார்க்க விரும்புகிறவர்க்கும் பாட்டெழுதியிருக்கிறார்-  .. அகவை 82ல் இறைவனடி சேர்ந்த வாலியின் அற்புத படைப்புகளின்  அகவை  எண்ணில் அடங்காதவை !

அவரின் மிக சிறந்த பாடல்களை சொல்ல ஆரம்பித்தால் சொல்லி கொண்டே போகலாம் ... இப்பொழுது என்னுள் தோன்றும் ஒரு சில முத்துக்கள் :-
* பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறார் -
- அவர் கருணை உள்ள நெஞ்சினிலே கோவில் கொள்கிறார் !

* பசும் தங்கம் , புது வெள்ளி , மாணிக்கம் , மணி வைரம் அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா ?
* பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீயில்லை -- விழியில் விழும் தூசி தன்னை நாவால் எடுக்க நீயில்லை --மனதில் ஏழும் குழப்பம் தன்னை தீர்க்க நீயில்லை --நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷ மானதேனோ ? வான் இங்கே , நீளம் அங்கே இந்த உவம்மை க்கு இருவரும் விளக்கமான தேனோ ?

* பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் - அறிவூட்டும் தந்தை நல வழி காட்டும் தலைவன் 
* எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது - எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது -- மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல - அதையும் தாண்டி புனித மானது.
 
* அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள் - அழுவதும் சிரிப்பதும் ஆசையின் விளைவுகள் 
* மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா ? மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ? உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை !

* ஓட  நீரோட,  இந்த உலகம் அது போல... ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல.. நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

* வயிறு குலுங்க சிரிப்பவர்கள் மனித ஜாதி - பிறர் வயிறு ஏறிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி 
* மாலையில் சந்தித்தேன் - மையலில் சிந்தித்தேன் - மங்கை நான் கன்னித்தேன் - காதலன் தீண்டும் போது - கைகளை மன்னித்தேன்.
 
* கொட்டும் மழைக்காலம் உப்பு விற்க போனேன் - காற்றடிக்கும் நேரம் மாவு விற்க போனேன் 
* தவறு என்பது தவறி செய்வது - தப்பு என்பது தெரிந்து செய்வது ...தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் - தப்பு செய்தவன் வருந்தி ஆகணும் 

* தாமரை மேலே நீர் துளி போல் - தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன ? நண்பர்கள் போலே வாழ்வதற்கு மாலையும் மேளமும் தேவையென்ன ?

* நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்,  நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன் 
* கோழியை பாரு காலையில் விழிக்கும் ..குருவியை பாரு சோம்பலை முறிக்கும் ... காக்கையை பாரு கூடி பிழைக்கும் ... நம்மையும் பாரு ஊரே சிரிக்கும் 

* அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு - அதில் புத்தன் என்னும் , சித்தன் என்னும் , பித்தன் என்னும் ஆனதென்ன சக்கையாக போகும் கரும்பு 

* பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை , தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை ..மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் , தவறாமல் அங்கே தெய்வம் வந்து சேரும் 

* பொய்யான சில பேர்க்கு புது நாகரிகம் ...புரியாத பல பேர்க்கு இது நாகரிகம் ..முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம் ? முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்

இவைகள் என் மனதில் சட்டென்று உதித்தவை - சென்ற பதிவில் சிலவற்றை சொன்னேன் ....இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .... சொல்லில் எழுத்தில் ஏட்டில் அடங்காது ...

  மேகங்களும் சென்னையில் விடாமல் அஞ்சலி செலுத்தி கொண்டே இருக்கின்றன..

கோடானகோடி நன்றிகளுடன் வெற்று இடம் பார்த்து விழிக்கிறது தமிழ் கூறும் நல்லுலகம் !

வாழ்க இந்த வாலிபனின் புகழ் !

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE