ஷூட்டிங் ஸ்பாட் : முள்ளும் மலரும்

By செய்திப்பிரிவு

முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் காட்சியில் காளி மனம் திரும்பி தன் தங்கையை இஞ்சினியருக்கு மணம் முடிக்க சம்மதம் தரும் போது,என் தங்கைக்கு பிடித்ததால் மட்டுமே நான் சம்மதிக்கிறேன்.

 

ஆனால் எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை சார் எனக் கூறும் போது,நடிக்க மறுத்து விட்டார் சரத்பாபு.இவ்வளவிற்குப் பின்னும் என்னைப் பிடிக்கவில்லை என்பதா என்று ஆதங்கப்பட்டார்.எல்லோரும் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் சரத்பாபுவைக் காணவில்லை.

 

வசனத்தை மாற்றினால் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டு சென்றதாக மற்றவர்கள் கூறியதைக் கேட்ட இயக்குநர் சரத்பாபுவைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தார்.காளியின் கேரக்டரை வெளிக்காட்டவே அந்த வசனம் என்று அவரைச் சமாதானப்படுத்திய பின்னரே நடித்தார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE