நிக்கி கல்ராணி தனது நிச்சயார்த்த புகைப்படங்களை வெளியிட்டார்

By

டார்லிங் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணி. அதனைத்தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 

இவர் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்த நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை அவர்கள் மறுக்கவில்லை. நடிகர் ஆதி மிருகம் படத்தில் ஆதி அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்டையே, இருவரின் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தினை நடிகை நிக்கி கல்ராணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE