குத்தாட்டம் போட்ட ரஜினி.. அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில்..!

By மினி சினி

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண கொண்டாட்டத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உற்சாகமாக நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற அனிருத் திருமண விழாவில், புதுமணத் தம்பதியினருடன் இணைந்து ரஜினி புன்னகையுடன் நடனமாடும் காட்சிகள் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

'மனசிலாயோ' பாடலுக்கு ரஜினி போட்ட ஸ்டெப்ஸ்

வைரலாகி வரும் அந்த வீடியோவில், 2024-ஆம் ஆண்டு வெளியான தனது 'வேட்டையன்' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடலான 'மனசிலாயோ' பாடலுக்கு ரஜினிகாந்த் உற்சாகமாக நடனமாடுகிறார். அனிருத் இசையமைத்த இந்தத் துள்ளலான பாடலுக்கு, மணமக்கள் அனிருத் மற்றும் காவ்யா மாறனுடன் இணைந்து ரஜினி ஒவ்வொரு நொடியையும் ரசித்து ஆடியுள்ளார். துள்ளலான இசைக்கும், ரஜினியின் துடிப்பான நடன அசைவுகளுக்கும் பெயர் பெற்ற இந்த பாடலின் பழைய நினைவுகளை இந்த வீடியோ மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளது.

வைரலாகும் கிரீஸ் திருமண புகைப்படங்கள்

நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் அனிருத்தும் காவ்யா மாறனும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனிருத், "வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் என் பொக்கிஷம், இனி என் வாழ்நாள் முழுமைக்கும் 11.11" எனக் குறிப்பிட்டு திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த திருமண விழாவில் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்து கொண்டார். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியப் பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 21-ல் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு

கிரீஸில் நடைபெற்ற திருமணம் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்ற தனிப்பட்ட நிகழ்வாக நடைபெற்ற நிலையில், வரும் நவம்பர் 21-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திரையுலகம், அரசியல் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த ஏராளமான முன்னணிப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் தலைவர் ரஜினி எதுக்குமே 'நோ' சொல்லாமல் எல்லோரையும் மகிழ்விக்கிறார் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼