நடிகர் பவன் கல்யாண் தனது 3வது மனைவி விவாகரத்து? பின்னணி?

By மினி சினி

ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் 13 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாகக் கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவன் கல்யாண் – அன்னா லெஷ்னேவா

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பவன் கல்யாண், ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படுபவர். தெலுங்கு சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த அவர், தற்போது ஆந்திரப் பிரதேச அரசியலில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். 2024 தேர்தலில் அவரது கட்சி 21 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசில் பவன் கல்யாண் துணை முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கையும் பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. இதற்கு முன்பு இரண்டு திருமணங்கள் செய்துள்ளார்.

முதல் திருமணம்

1997ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகள் நந்தினியைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் 1997ஆம் ஆண்டு நடைபெற்றது. இருப்பினும், சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்ந்தனர்.

இரண்டாவது திருமணம்

அதைத்தொடர்ந்து, நடிகையான ரேணு தேசாய் என்பவரை பவன் கல்யாண் காதலித்து அவருடன் வாழத் தொடங்கினார். 2007ஆம் ஆண்டு முதல் மனைவி நந்தினி விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இதையடுத்து, 2008ஆம் ஆண்டு விவாகரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு பவன் கல்யாண், நடிகை ரேணு தேசாயை மணந்தார். இவர்களுக்கு ஆத்யா மற்றும் அகிரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தத் திருமண வாழ்க்கையும் 2012ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

மூன்றாவது திருமணம் – அன்னா லெஷ்னேவா

பின்னர் 2013ஆம் ஆண்டு மூன்றாவதாக, ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை பவன் கல்யாண் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தாங்கள் பிரிய முடிவெடுத்துள்ளதாக பவன் கல்யாண் மற்றும் அன்னா லெஷ்னேவா தம்பதியினர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “எங்கள் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒன்றாகக் கழித்த பிறகு, பரஸ்பர புரிதலுடனும் மரியாதையுடனும் நாங்கள் பிரிய முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

எனினும், இந்தத் தனிப்பட்ட மாற்றத்தின் போது இருவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதையும், குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதையும் தொடர்ந்து உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼