நடிகர் ரவி மோகனும், தயாரிப்பாளர் சுஜாதாவின் மகளான ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேருக்கும் மகன்களும் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவர்கள் சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள். அதனையடுத்து தனது மகன்களை வளர்க்கும் பொறுப்பில் முழுதாக ஈடுபட்டிருக்கிறார் ஆர்த்தி. இந்நிலையில் தனது மகன் குறித்து பெருமிதத்தோடு இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போஸ்ட் பாராட்டை பெற்றிருக்கிறது.
ரவி மோகனும், ஆர்த்தியும் நடிகை குஷ்பூ மூலமாக பழக்கமானார்கள். அந்தப் பழக்கம் காதலாக மாறியது. உடனடியாக இரண்டு பேரின் வீட்டிலும் குஷ்பூவே பேசி சம்மதம் வாங்கி தந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பேரும் திருமண செய்துகொண்டு கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள். இரண்டு மகன்களையும் பெற்றார்கள். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டார்கள். மகன்கள் நன்றாக வளர்ந்த பிறகும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்களே என்று பலரும் சங்கடப்பட்டார்கள்.
ஆர்த்தியின் ஜீவனாம்ச வழக்கு: ஆர்த்தியும் ரவியுடன் மீண்டும் சேர்ந்துவிட என்பதில் தீவிரமாக இருந்தார். அதற்காக பல முயற்சிகளையும் எடுத்தார். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இனிமேலும் இது கூடி வராது என முடிவு செய்து, 'மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என மனுத்தாக்கல் செய்தார். அது அவருக்கு பின்னடைவை கொடுத்தது. பலரும் ஆர்த்தியை ட்ரோல் செய்துவிட்டார்கள். அந்த மனு தள்ளுபடியும் ஆனது. அதைவிட குறைவான தொகையான மாதம் 3 லட்சம் ரூபாய் இப்போது வழங்கப்படுகிறது.
மகன்கள்தான் எல்லாம்: இந்த பிரிவு நிகழ்ந்த சமயத்திலிருந்தே கெனிஷாவுடன் ரவி நெருக்கமாக இருக்கிறார். ஆர்த்தியோ மகன்கள்தான் உலகம் என்று இருக்கிறார். அவர்களை வைத்து ஆர்த்தி போடும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகள் எல்லாம் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது ஆர்த்தி போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றும் பலரிடம் பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றிருக்கிறது.
ஆர்த்தி ரவி போஸ்ட்: அதாவது ஆர்த்தியின் மூத்த மகனான ஆரவ் லண்டனில் தனது படிப்பை முடித்திருக்கிறாராம். அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மகனின் கனவுகளுக்கு ஆதரவாக இருந்து அவற்றை நனவாக்க துணை நிற்க வேண்டிய அப்பாவே தடையாக மாறியபோதும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி எழும் வலிமையை மகன் ஆரவ் பெற்றிருக்கிறார். லண்டன் சென்று தனக்கு பிடித்த துறையில் தன்னுடைய கனவை தொடர்ந்தார்.
எழுந்து நின்று கைதட்டல்: தனது படிப்பையும் அங்கே வெற்றிகரமாக முடித்திருக்கிறார். அரங்கமே எழுந்து நின்று பாராட்டும் அளவுக்கு சாதனை படைத்தார். அவரது வெற்றியை நாங்கள் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினோம். ஒரு குழந்தையின் கனவுக்கு தடையாக இருக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் தன் மீதும் தனது கனவுகள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் குழந்தையின் மன வலிமையை ஒருபோதும் உடைக்க முடியாது. இடி புயல் சூழலெல்லாம் வந்து வந்து போகலாம். இமைக்கின்ற நொடி ஒன்றில் எல்லாமே மாறலாம்" என குறிப்பிட்டிருக்கிறார்.