சம்பளம் வாங்காமல் நடித்த ஹிருத்திக் ரோஷன்!

By மினி சினி

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதற்காக எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் மீதும், படக்குழுவினர் மீதும் கொண்ட அன்பும் மரியாதையும் காரணமாகவே ஹிருத்திக் ரோஷன் சம்பளம் வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

பணத்தைவிட அன்புக்கும் நட்புக்கும் மதிப்பளித்த நடிகர்!

சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில், சக கலைஞர்கள் மீதான அன்பு மற்றும் மரியாதைக்காகச் சம்பளம் பெறாமல் நடித்ததாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼