நடிகர் சந்தானம் நடித்த காட்சிகள்.. கோடிகளை கொடுத்து காட்சிகள் நீக்கிய சன் பிக்ச்சர்ஸ்!

By மினி சினி

ஜெயிலர் 2 படத்தில் நடிகர் சந்தானம் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது மட்டுமில்லாமல் படத்தில் நடிக்க பெரும் தொகையும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் சந்தானம் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது திரை வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இப்படத்திற்காக ஏழு நாட்கள் கால்ஷீட் கொடுத்து சந்தானம் நடித்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது நகைச்சுவைக் காட்சிகள் எதுவும் இறுதிப் பதிப்பில் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் முதல் வாரத்தில் 549 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ரசிகர்களிடயே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இப்படத்திற்காக படமாக்கப்பட்ட பல காட்சிகள் ஃபைனல் எடிட்டில் நீக்கப்பட்டுள்ளன. நடிகர் மோகன்லால் , விஜய் சேதுபதி , சந்தானம் ஆகியோருக்கு படத்தில் நிறைய காட்சிகள் இருந்து அவை கடைசியில் நீக்கப்பட்டுள்ளன. படத்தில் இடம்பெறாத இந்த காட்சிகளில் நடிக்க இந்த நடிகர்களுக்கு பெரும் தொகை சம்பளமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

4 கோடி சம்பளம் வாங்கிய சந்தானம்

ஜெயிலர் 2 இரண்டாம் பாதியில் சந்தானம் ஒரு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வித்யா பாலனின் தந்தை மிதுன் சக்கரவர்த்தியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சந்தானம் , ரெடின் கிங்ஸ்லி ஆகியோரது குழு நடித்துள்ளனர். சந்தானம் மொத்தம் 7 நாட்கள் கால்ஷீட் வழங்கியதாகவும் இதற்கு அவருக்கு ரூ 4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீக்கிய காரணம் என்ன

சந்தானத்தின் காட்சிகள் நீக்கப்பட்டதற்குப் படத்தின் திரைக்கதை அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணன் தொடர்பான காட்சிகளில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்ததாகவும், இரண்டாம் பாதியில் கூடுதல் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்ப்பது படத்தின் தீவிரமான போக்கையும் திரைக்கதையின் வேகத்தையும் பாதிக்கலாம் எனக் கருதப்பட்டதால் இந்த காட்சிகளை நெல்சன் நீக்கியதாகவும் கூறப்படுகிறது

சந்தானத்தின் காட்சிகளைப் போல் விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் குறைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு 3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் அவரது காட்சிகல் குறைக்கப்பட்டது படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் மட்டும் சுருக்கமாக இடம்பெற்றது.

பிற நடிகர்களின் சம்பளம்

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடித்த ஹ்ரித்திக் ரோஷனுக்கு ரூ.10 கோடி, வித்யா பாலனுக்கு ரூ.8 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு ரூ12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

இத்தனை கோடிகள் செலவு செய்து காட்சிகள் நீக்கப்பட்டிருந்தாலும் ஜெயிலர் 2 படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றி அனைத்தையும் மறக்க வைத்துள்ளது. ஒரு வேளை பாக்ஸ் ஆபிஸில் படம் சொதப்பியிருந்தால் இயக்குநர் நெல்சன் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼