தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை அன்ஷிதா அஞ்சி, தனது வாழ்க்கையில் தாயின் தியாகமும் போராட்டமும் எவ்வளவு முக்கியமானவை என்பதைப் பகிர்ந்துள்ளார்.
அன்ஷிதாவின் தாய்க்கு வெறும் 14 வயதிலேயே காதல் திருமணம் நடைபெற்றது. 15 வயதில் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், 17 வயதில் அன்ஷிதாவையும் பெற்றெடுத்தார். ஆனால், 20 வயதிற்குள் அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளின் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர் மனம் தளரவில்லை. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வளைகுடா நாட்டிற்குச் சென்று வேலை செய்தார்.
அங்கு வாட்டர் தீம் பார்க்கில் பணியாற்றிய அவர், குழந்தைகளைப் பிரிந்த ஏக்கத்தையும் வலியையும் மனதில் சுமந்துகொண்டு சுமார் ஒன்பது ஆண்டுகள் உழைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஊருக்கு வந்து குழந்தைகளைப் பார்த்துவிட்டுச் செல்வார். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.
பின்னாளில் அன்ஷிதா நடிப்புத் துறையில் முன்னேறி, குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கியபோது தாயின் சுமையும் ஓரளவு குறைந்தது. தனது உழைப்பாலும் திறமையாலும் குடும்பத்திற்குத் துணையாக நின்ற அன்ஷிதாவின் வளர்ச்சிக்குப் பின்னால், தாயின் அளவற்ற தியாகமும் இருக்கிறது.
ஆனால், இந்தத் தாயின் வாழ்க்கையில் மனதைத் தொடும் இன்னொரு விஷயமும் இருக்கிறது!