தினமும் 10–15 முறை “ஐ லவ் யூ” சொல்வேன்; ராஷ்மிகா குறித்து விஜய் தேவரகொண்டா

By சினி மினி

சக நடிகர்களாக இருந்து வாழ்க்கைத்துணைகளாக மாறிய தங்களது பயணம் குறித்து விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் மனம் திறந்து பேசியுள்ளனர். பல ஆண்டுகளாக காதல் குறித்த தங்களது பார்வை எவ்வாறு மாறியுள்ளது, ஒரு உறவை நீடிக்கச் செய்யத் தேவையான சிறிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்தும் சமீபத்தில் நடைபெற்ற பேட்டியில் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

முதன்முதலில் ராஷ்மிகாவை சந்தித்தபோதே, “இவர்தான் தனது வாழ்க்கைத்துணை” என்று விஜய் தேவரகொண்டாவுக்குத் தோன்றியதா என்ற கேள்விக்கு, அவர் “இல்லை” என்று பதிலளித்தார்.

முதல் பார்வையிலேயே காதல் ஏற்படுவதை தான் நம்பவில்லை என்றும், காதலைப் புரிந்துகொள்ள ஒரு பயணம் தேவை என்றும் விஜய் கூறினார்.

“முதல் பார்வையிலேயே ஒருவர்தான் நமக்கானவர் என்று எப்படி தெரியும்? எனக்கு முதல் பார்வைக் காதலில் நம்பிக்கை இல்லை. காதலை நோக்கிச் செல்ல எனக்கு ஒரு பயணம் தேவை. ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதை முதல் பார்வையிலேயே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் அவர்தான் நமக்கானவர் என்று அப்போதே தெரிந்துவிடுமா? இல்லை,” என்று விஜய் கூறினார்.

ராஷ்மிகாவை முதன்முதலில் பார்த்தபோது அவர் அழகாக இருக்கிறார் என்று தனக்குத் தோன்றியதாகவும், ஆனால் அப்போது காதல் குறித்து சிந்திக்கும் சூழ்நிலையில் தான் இல்லை என்றும் விஜய் தெரிவித்தார்.

“அது என்னுடைய மூன்றாவது அல்லது நான்காவது படமாக இருந்தது. புதிய குழுவுடன் முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றிருந்ததால் உற்சாகமும் பதற்றமும் இருந்தது.

எப்படியாவது வெற்றிகரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒரு படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் என்பது ஏற்கனவே அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அந்த நேரத்தில் காதலைப் பற்றி சிந்திக்கும் அளவுக்கு நீங்கள் அவ்வளவு இயல்பான மனநிலையில் இருக்க மாட்டீர்கள்,” என்று விஜய் கூறினார்.

இருவரும் முதன்முதலில் சந்தித்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக விஜய் கூறினார். ஆனால் உடனே ராஷ்மிகா அதைத் திருத்தினார்.

“நாம் சந்தித்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. நம்முடைய படம் வெளியாகி எட்டு ஆண்டுகள்தான் ஆகிறது,” என்று ராஷ்மிகா கூறினார்.

அதற்கு சிரித்துக்கொண்டே விஜய் அளித்த பதில்:

“நான் அவளை எவ்வளவு காலமாகத் தெரிந்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கணக்கிட அந்தப் படத்தையே நான் அளவுகோலாக வைத்திருக்கிறேன்,” என்றார் விஜய்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼