பேசுறது ஒரு சம்பளம்.. வாங்குவது ஒரு சம்பளம்!.. எப்போது மாறுவார் எஸ்.கே?!..

By சினி மினி

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து மெரினா திரைப்படம் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியவர்தான் சிவகார்த்திகேயன்.

அதன்பின் மனம் கொத்திப் பறவை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவருக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது.

அதன்பின் வெளியான ரஜினி முருகன் படமும் சூப்பர் ஹிட் அடிக்கவே கோலிவுட்டில் முக்கிய நடிகராக சிவகார்த்திகேயன் மாறினார். மிகவும் குறுகிய காலத்திலேயே சீனியர் நடிகர்களை ஓரம் கட்டி விட்டு மேலே போனார் சிவகார்த்திகேயன். கமல், ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் மாறினார்..

அதேநேரம் சிவகார்த்திகேயன் மீது சில விமர்சனங்களும் இருக்கிறது. படம் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்து இயக்குனர்களை பல வருடங்கள் காத்திருக்க வைக்கிறார்.. ஒரு தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்துவிட்டு வேறு தயாரிப்பாளர் படத்தில் நடிக்க போய்விடுகிறார் என்றெல்லாம் இவர் மீது புகார் இருக்கிறது. தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்..

இந்த படத்திற்கு பின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜைகள் நடந்தது. அதில் கலந்து கொண்ட சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் முகத்தில் எந்த உற்சாகமும் இல்லை. இதற்கு பின்னணியில் ஒரு காரணம் தெரிய வந்திருக்கிறது..

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு நடிக்க சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அவருக்கு 35 கோடி சம்பளம் பேசப்பட்டது. ஆனால் தற்போது என்னுடைய சம்பளம் ரூ.60 கோடி என எஸ்.கே கறாராக சொல்லிவிட்டாராம். எனவே, வேறு வழியில்லாமல் 25 கோடி சேர்த்துக் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார் தியாகராஜன். அதுமட்டுமல்ல, வெங்கட்பிரபு படம் சயின்ஸ் பிக்சன் என்பதால் எஸ்.கே-வை அமெரிக்காவுக்கெல்லாம் கூட்டிச் சென்று VFX தொடர்பான பணிகளை வெங்கட் பிரபு மேற்கொண்டார்.

அது தொடர்பாக தியாகராஜன் பல லட்சங்களை செலவு செய்திருக்கிறார். ஆனால், வெங்கட்பிரபு வேண்டாம் என சொல்லிவிட்டு ராம்குமார் பாலகிருஷ்ணனை இயக்குனராக தேர்ந்தெடுத்து விட்டார் சிவகார்த்திகேயன். இதுவும் ஒரு காரணம் என்ன சொல்லப்படுகிறது..

சிவகார்த்திகேயன் இப்போது மட்டுமல்ல!.. தொடக்கத்தில் இருந்து இப்படித்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ரஜினி முருகன் படத்தில் நடித்த போது அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு கோடி. ஆனால் படம் துவங்கப்படும்போது என்னுடைய சம்பளம் 5 கோடி என சொல்லி அந்த தொகையை வாங்கிக் கொண்டார். அதேபோல் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த ஒப்புக்கொண்ட போது அவருக்கு பேசிய சம்பளம் ஒரு கோடி. ஆனால், படம் துவங்கும்போது ' இப்போது என் ரேஞ்சே வேற' என சொல்லி ரூ.10 கோடி சம்பளமாக வாங்கினராம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼