மூணு வருஷம் காதல் தொடர்ந்து உச்சத்துல..!

By சினி மினி

Actress Sivaranjini - இவங்கதான் 90s mamitha baiju சினிமா career-ல peak-ல இருக்கும்போது ரிட்டயர்மென்ட் ஆனவங்க தளபதி விஜய் மட்டும் இல்ல.. அதுக்கு முன்னாடியே இந்த சாதனையை செஞ்சவங்க நடிகை சிவரஞ்சனி

.

இவங்களோட உண்மையான பேர் உமா மகேஸ்வரி. பள்ளிப் பருவத்திலேயே ஒரு function-ல இவங்க நடனம் பார்த்த ஒரு இயக்குனர் இவங்களை கவனிச்சு, 1990-ல் "நிலா பெண்ணே" படத்துல முதல் வாய்ப்பு கொடுத்தாரு

.

1990 முதல் 97 வரைக்கும் ஏழே வருஷத்துல 39 படங்கள்.. அதாவது வருஷத்துக்கு 7-8 படம் சராசரியா. சில நாட்களில் காலையில் ஒரு படப்பிடிப்பு, இரவுல வேற ஒரு படம் shoot அப்படின்னா எவ்வளவு பிஸியான காலம் அது

.

ரஜினிகாந்த், அஜித், விஜய், பிரபுதேவா தவிர அந்தக் காலத்துல இருந்த கிட்டத்தட்ட எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்திருக்காங்க. வில்லன் ஆக்டரா அறியப்பட்ட ஆனந்த்ராஜ் ஒரு படத்துல ஹீரோவா நடிச்ச "டேவிட் அங்கிள்" படத்துலயும் இவங்க நடிச்சிருக்காங்க .

Brown கண்களைக் கொண்ட மோகினி என்ற நடிகை இவருக்கு முன்பே அறிமுகமானாலும், உலகநாயகன் கமலஹாசனுடன் கலைஞன் படத்தில் சில காட்சிகளில் ஜோடி சேரும் வாய்ப்பு சிவரஞ்சனிக்கு தான் கிடைத்தது.

1994-ல தெலுங்குல "ஆமே" படத்துல நடிச்சப்போ, அதே படத்துல நடிச்ச தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துடன் காதல் ஏற்பட்டது. இந்தப் படத்துக்காக இவங்களுக்கு சிறந்த நடிகைக்கான நந்தி விருது (Nandi Award) கிடைச்சிருக்கு . அதன் பிறகு தெலுங்கு சினிமாவுல "ஊஹா" (Ooha) என்ற பேரில் நடிச்சு பிரபலமானாங்க

.

மூணு வருஷம் காதல் தொடர்ந்து, career-ஓட உச்சத்துல இருக்கும்போதே 1997-ல் ஸ்ரீகாந்தை திருமணம் செஞ்சுக்காங்க. கிட்டத்தட்ட ஏழு படங்களுக்கான அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துட்டு நடிப்பை முழுசா நிறுத்தினாங்க

.

இதைப் பத்தி கேட்டப்போ "பீல்டு அவுட் ஆகி போவதை விட, இப்படி நிறுத்தி போவது எனக்கு கிடைச்ச பாக்கியம்" -ன்னு சொன்னாங்களாம்

.

இப்போ கணவர் ஸ்ரீகாந்துடன் ஹைதராபாத்துல செட்டில் ஆகி, ரோஷன், மேதா, ரோஹன் என்ற மூணு பிள்ளைகளுடன் குடும்பமா இருக்காங்க. மகன் ரோஷன் "நிர்மலா கான்வென்ட்" படம் மூலம் ஹீரோவா அறிமுகம் ஆகியிருக்காரு

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE