தமிழில் சூப்பர் ஸ்டாருக்கென எப்படி மாஸ் இசையை இசைஞானி கொடுத்திருந்தாரோ, அது போல தெலுங்கின் மாஸ் நடிகரான சிரஞ்சீவிக்கு மிக சிறப்பான பல இசையை அவர் படங்களில் அளித்திருக்கிறார், அப்படியொரு படம்தான் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த மாரண ம்ருதங்கம். எண்டமூரி வீரேந்திரநாத்தின் கதையில் , கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த படம்.
இப்பட ஷூட்டிங்கின்போது ஒரு ரசிகர் ஆர்வமிகுதியில் சிரஞ்சீவிக்கு செய்த செயல் அவரின் உயிரையே போக்கி இருக்கும், அன்று படப்பிடிப்பு தளத்தில் சிரஞ்சீவி இருக்கும்போது ஒரு ரசிகர் வந்து தனக்கு இன்று பிறந்த நாள் உங்கள் முன்னிலையில் கேக் வெட்டவேண்டும் என வலுக்கட்டாயமாக சிரஞ்சீவியை கட்டாயப்படுத்த இருப்பினும் அதற்கு அவர் ஒப்புகொள்ளாத நிலையில் டக்கென கேக்கை வெட்டி சிரஞ்சீவியின் வாயில் திணித்திருக்கிறார், அதை அவர் விரும்பாத நிலையில் தடுத்திருக்கிறார், இருந்தாலும் லேசாக கேக்கின் சின்ன பகுதி உதட்டின் மேல் பட்டு லைட்டா உள்ளே சென்றுவிட்டதாம், இதனால் சிரஞ்சீவியின் உதடுகள் நீல நிறத்திற்கு மாற, அந்த கேக்ல சந்தேகத்துக்குரிய பொருட்கள் இருந்ததாக தெரியவந்திருக்கிறது. மேலும் சிரஞ்சீவிக்கு அவர் விஷம்தான் கொடுத்திருக்கிறார் என்ற உண்மை கண்டறியப்பட்டது. தன்னுடன் நெருக்கம் காட்டவில்லை என்ற காரணத்துக்காக அந்த ரசிகர் அவ்வாறு செய்ததாக கூறப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பின் ஆஸ்பத்திரிக்கு சென்று சில நாட்கள் இருந்து குணம் பெற்ற பிறகே திரும்ப படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிரஞ்சீவி.
போதைக்கும்பல் பின்னணியில் அமைந்த கதை இப்படம். சிரஞ்சீவியும், நாகேந்திரபாபுவும் சூதாட்டம் ஆடும் கேசினோ க்ளப் வைத்து நடத்துகின்றனர். ஒருமுறை கார் பழுதாகி நிற்கும் சுகாசினி மற்றும் ராதாவுக்கு சிரஞ்சீவி உதவி செய்கிறார், இதை பற்றி ராதா ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். இந்த நிலையில் சுகாசினிக்கு ஒரு மருத்துவமனையில் செவிலியர் வேலை கிடைக்கிறது, இதற்கும் சிரஞ்சீவி காரணமாக இருக்கிறார். ஒரு பக்கம் ராதா மீது காதல், சுகாசினிக்கு சிரஞ்சீவி மீது காதல் என சென்று கொண்டிருக்க சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு போதை பொருள் கும்பலையும் அவர்கள் அத்தோடு நில்லாமல் மனித உறுப்புகளை கடத்துவதையும் வாடிக்கையா வைத்திருப்பதை வைத்து வில்லன் குரூப்பை கண்காணிக்கிறார், இந்த குரூப்பில் சுகாசினியின் வேலையில்லாத தம்பியும் தெரியாமல் இணைகிறார், இறுதியில் எப்படி அந்த கும்பலை பிடித்து கரை சேர்ந்து நாயகி கரம் பிடிக்கிறார் என்பதே கதை.
சுப்ரீம் ஹீரோ, டைனமிக் ஹீரோ என்றுதான் இப்படத்திற்கு முன் சிரஞ்சீவிக்கு அடைமொழி கொடுத்து அழைத்து இருந்திருக்கிறார்கள் முதல் முறையாக இந்த படத்தில்தான் மெகா ஸ்டார் என்ற பட்டம் சிரஞ்சீவிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை பகுதிகளில் இப்படம்எடுக்கப்பட்டது.
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் மற்றும் இசை இப்படத்திற்கு பெரும்பலம். கரிகி பொய்யானு, கொடவே கொடவம்மா, ஜிங்கிலி ஜும ஜும, கொட்டண்டி திட்டண்டி, சரிகம பதனிச ரச ரச என அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தன. எஸ்.பி.பி, சித்ரா, பி.சுசீலா ஆகியோர் இப்பட பாடல்களை பாடி இருந்தனர். படம் சிரஞ்சீவிக்கு வெற்றிப்படமா அமைந்தது.