நடிகை மயூரியின் சோகம்

By செய்திப்பிரிவு

தமிழில் கடந்த 1997ல் வெளியான கும்பகோணம் கோபாலு என்ற படத்தில் நடித்தவர் மயூரி. அதன் பிறகு மலையாளம் மற்றும் கன்னட படங்களில் தான் அதிகம் நடித்தார்.

தமிழில் கும்பகோணம் கோபாலுக்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி, படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் ஆகவும் பிரித்விராஜ் நடித்த கனா கண்டேன் படத்தில் அவரின் போலி மனைவியாக நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடித்த சம்மர் இன் பெத்லகேம் படத்தில் நல்ல ரோல் செய்திருந்தார்.

இன்னும் நிறைய உயரங்களை தொடவேண்டிய நடிகை, சில வாழ்க்கை பிரச்சினைகளால் தனது 22 வயதில் தற்*******லை செய்து கொண்டார் இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் அதற்கு சில நாட்களுக்கு முன் அந்த நேரத்தில் வந்த முன்னணி வார இதழில் இந்த த***ற்**லைக்கு எதிராக எல்லாம் பேசி இருந்தார் மிக bold ஆக பல விசயங்களை பேசி பேட்டி கொடுத்திருந்தார், இவர் மறைந்த போது, இவரை சார்ந்தவர்களும் இவர் அப்படிப்பட்ட நபரில்லை மிக தைரியமான பெண்மணி எப்படி இப்படி செய்தார் என அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் கலந்த தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

கொல்கத்தாவை பூர்விகமா கொண்டு, பெங்களூரில் படிப்பு எல்லாம் படித்து வளர்ந்து சென்னையில் வாழ்ந்து தன் வாழ்வை இளம் வயதிலேயே முடித்துக்கொண்டார். ஆனால் எப்படிப்பட்ட தைரியமானவராக இருந்தாலும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஒரு மனிதரை அந்த நேரத்தில் அது போல தவறான முடிவுகளுக்கு தள்ளி விடுகிறது. எது எப்படி இருப்பினும் அப்படி ஒரு முடிவை எடுப்பது தவறான விசயமாகும், எல்லா கஷ்டமும் எல்லா காலமும் நீடிப்பதில்லை, என் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டவர்கள் பின்னாட்களில் நல்லா இருந்ததையும் முன்பு பட்ட கஷ்டத்திற்கு இப்போ சுமாராகவாவது இருப்பதையும் பார்க்கிறேன். இப்படி காலச்சூழ்நிலை எல்லாவற்றையும் மாற்றிவிடும் அதனால் இது போன்ற முடிவுகளை யாருமே எடுக்காதீர்கள். மிக தவறானது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE