Sreeja and Senthil - இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுனா எப்படி இருக்கும்.. அப்படின்னு மொத்த தமிழ்நாடும் ஆசைப்பட்ட ஜோடி.. கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க தான்.. ஆனா அது காதல் கல்யாணம் இல்ல.
.
விஜய் டிவியின் 'மதுரை' சீரியலில் இவர்கள் இருவரின் காம்பினேஷன் மிகப்பெரிய ஹிட் அடித்ததால், அதே 'சரவணன் - மீனாட்சி' என்ற பெயரிலேயே புதிய சீரியல் தொடங்கப்பட்டது.
உண்மையில் இந்த சீரியலுக்கு 'சரவணன் மீனாட்சி' என்று வைப்பதற்கு பதிலாக 'மீனாட்சியின் சரவணன்கள்' என்றே பெயர் வைத்திருக்கலாம்! ஏன்னா செந்தில் ஸ்ரீஜா க்கு அப்புறம் ரத்சிதா தான் மீனாச்சி ஆனா சரவணன் மட்டும் மாறிட்டே இருந்தாங்க.
ஆரம்ப கட்ட சரவணன் மீனாட்சியில் ஸ்ரீஜாவை தினமும் சூட்டிங்கிற்கு அழைத்து வரும் அவரது சித்தப்பா, ஒருநாள் சூட்டிங் ஸ்பாட்டிலேயே திடீரென காலமானார். உறவினர்கள் யாரும் இல்லாத அந்தச் சூழலில், ஸ்ரீஜாவிற்குத் துணையாக நின்று, சித்தப்பாவின் உடலை வீடு கொண்டு சேர்க்கும் வரை அனைத்து உதவிகளையும் செந்தில் தான் முன்னின்று செய்தார். இதன் பிறகே இருவருக்குள்ளும் ஒரு நட்பு மலர்ந்தது.
ஸ்ரீஜாவிற்கு அவரது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் விருப்பமில்லாமலேயே நிச்சயதார்த்தம் வரை சென்றது. செந்திலின் போன் நம்பர் கூட இல்லாத ஸ்ரீஜாவிற்கு, தெரிந்தவர் ஒருவர் மூலமாக செந்திலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்திற்கு வந்த செந்தில், ஸ்ரீஜாவின் சோகமான முகத்தைப் பார்த்து, "உங்களுக்குப் பிடிச்சுதான் இந்த கல்யாணம் நடக்குதா?" எனக் கேட்க, உடைந்து அழுதார் ஸ்ரீஜா. அதன்பின் ஸ்ரீஜா தைரியமாகப் பேசி அந்தத் திருமணத்தை நிறுத்தினார்.
அதன்பிறகும் இவர்களுக்குள் காதல் பிறக்கவில்லை. வீட்டில் திருமணத்திற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்தபோது, "நாம் ஏன் திருமணம் செய்துகொள்ளக் கூடாது?" என ஸ்ரீஜாதான் செந்திலிடம் நேரடியாகக் கேட்டிருக்கிறார் (காதல் சொல்லவில்லை!).
ஸ்ரீஜா மலையாளி, செந்தில் தமிழர் என்பதால் இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியில் இருவீட்டார் சம்மதமும் இன்றி, "ஆனது ஆச்சு, ஒன்னா வாழ்ந்து பார்ப்போம்" என அரேஞ்ச் மேரேஜ் பாணியில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் குழந்தை இல்லாததால் குடும்பத்தாரின் அழுத்தம், மன உளைச்சல் மற்றும் சிறு சிறு சண்டைகளைக் கடந்தனர். 2023-இல் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது ஸ்ரீஜா யூடியூப் சேனல் மற்றும் சொந்த பிசினஸைக் கவனித்து வர, செந்தில் ரேடியோ ஜாக்கியாகவும், தொடர்ந்து சின்னத்திரையிலும் இயங்கி வருகிறார்.
மொத்தத்தில், "இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்" எனத் தமிழ்நாட்டு மக்கள் பரப்பிய வதந்தியும் கொடுத்த அழுத்தமுமே, ஐடியாவே இல்லாத இரண்டு பேரை நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக்கிவிட்டது!