பிக் பாஸ் சீஸன் 8 எப்போது?

By செய்திப்பிரிவு

பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர்.

தமிழில் இதுவரை முதல் சீசனில் இருந்து உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் வாங்கும் சம்பளமும் மிகப்பெரிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக நடைபெற்று முடிந்த பிக் பாஸ் 7வது சீசனில் மக்களிடம் இருந்து அதீத வரவேற்பை பெற்று டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சீரியல் நடிகை அர்ச்சனா. அதே போல் பிரதீப் ஆண்டனிக்கு பிக் பாஸ் 7 நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது.

இந்த நிலையில், வருகிற அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 8 துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறதாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE