இதை சொன்னால் எத்தனை பேர் கமெண்டில் சண்டைக்கு வருவீர்கள் என்று தெரியவில்லை
இளையராஜாவிற்கு அடுத்து நான் true மியூசிக் டைரக்டர் என்று பெரிதும் மதிக்கும் ஒரு இசையமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் தான்
ரகுமான் ஹரிஷ் ஜெயராஜ் GVP , விஜய் ஆன்டனி, அனிருத் என்று நீங்கள் எத்தனை பேரை எந்த உச்சாணி கொம்பில் வைத்தாலும் ஜோஷுவா ஸ்ரீதர் கென்று தனி இசை உலகம் அமைத்து இவரை மட்டும் அதில் ராஜாவாக உக்கார வைக்கலாம்..இவரின் இசை வேற ராகம்
காதல் படத்தில் இவரின் இசை என்னை கட்டி போட்டது வேறு ஒரு taste of மியூசிக் இவரிடம் பார்த்தேன் இவர் இசை எந்த இசையமைப்பாளரின் சாயலிலும் இல்லை தனியாக தெரிந்தது
காதல் படத்தில் தங்கச்சி கருப்பாயி பாடலில் அந்த instrument வேற மாறி இருந்தது முதல் முறை கேட்கும்போது சிலிர்த்தது எனக்கு
நீங்கள் கல்லூரி படத்தில் உன்னருகில் பாடலை uutube இல் ஒருமுறை கேளுங்கள் பிறகு ஒரு ஆயிரம் முறை கேட்டாலும் உங்களுக்கு முதல்முறை கேட்பது போல் goosebump வரும் சலிக்கவே சலிக்காது படம் வந்து 19 வருடம் ஆனது இதை எழுதும்போது கூட அந்த பாட்டை கேட்டுக்கொண்டேதான் எழுதுகிறேன் சலிக்கவே மாட்டேங்குது
வெப்பம் படத்தின் மலை வரும் அறிகுறி பல வருடம் என் callertune அதுதான்
இவர் சமீபத்தில் ஒரு interview கொடுத்திருந்தார் அதில் பல உண்மைகளை சொன்னார்
இவர் 16 படங்கள் studio இல்லாமல் வாடகை ஸ்டுடியோவில் தான் அத்தனை ஹிட் பாடல்கள் கம்போஸ் செய்திருக்கிறார் அதன் கஷ்டங்களை பகிர்ந்தார்
ஆரம்பத்தில் இளையராஜாவிடம் தான் keyboard வாசிப்பேன் என்று அவர் வீட்டு வாசலிலேயே பல நாள் காத்திருக்கிறார் வாய்ப்பு கிடைக்கவே இல்லை கடைசியில் மணிஷர்மாவிடம் வேலை செய்ய வாய்ப்பு அதன் பிறகு ரஹுமானிடம் வேலை செய்ய வாய்ப்பு அதன் பிறகு காதல் பட வாய்ப்பு என வாழ்க்கையில் சில சந்தோசங்கள் நடக்கும்போதுதான் இவர் முதல் திருமணம் விவாகரத்து வரை சென்றுள்ளது அப்பொழுதான் இவருக்கு இன்னொரு பெண் மீது காதல் வர அந்த பெண்ணின் வீட்டில் இவர் மீது போலீஸ் complaint கொடுக்க இவரை அந்த பெண்ணை விட்டு விலக சொல்லி போலீஸ் வற்புறுத்த இவர் மறுக்க இரண்டுநாள் ஜட்டியுடன் lockup இல் உக்கார வைத்துள்ளனர்
அடுத்தநாள் அந்த வெறியுடன் வெளியே வந்துதான் காதல் படத்தில் உனக்கென இருப்பேன் பாடலை கம்போஸ் செய்து கொடுக்க அதை கேட்டு பாலாஜி சக்திவேல் அழுது இருக்கிறார்
இப்படி அந்த பிரச்சனை இவரை விடாமல் துரத்த இவர் மீது அந்த காதலுக்காக கேஸ் போட முடியாது என்பதால் producer இடம் காசை வாங்கி தலைமறைவு என்று கேஸ் போட்டு ஒருமாதம் சென்ட்ரல் ஜெயிலில் இருந்ததாக அந்த interview இல் சொல்லி இருந்தார்
அந்த பிரச்சனையை பலவாறாக பத்திரிகையில் எழுதி பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் வந்த சிறிய படங்களை 2020 வரை விருப்பமே இல்லாமல் இசையமைத்து கொடுத்து இருக்கிறார் அதன் பிறகு பெரிய படம் வந்தால் மட்டும் இசையமைக்கலாம் என்று இசையமைப்பதை நிறுத்தி விட்டாராம்.
யார் மிஸ் பண்றாங்களோ இல்லையோ இவரின் இசையை ரொம்ப மிஸ் பண்றோம்!
-நன்றி: மீரா மஹகதி