'விதி' திரைப்படம் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள்..

By சினி மினி

விதி திரைப்படம் - 26.01.1984.

ஜெய் சங்கர், சுஜாதா , மோகன் ,

பூர்ணிமா பாக்யராஜ்.

1984 ஜனவரி மாதம் 26 அன்று வெளியான விதி திரைப்படம் -‘தன்னை பாலியல் வன்புணர்வு செய்தவனையே தேடிச் சென்று திருமணம் செய்து கொள்வதில்தான் ஒரு பெண்ணின் ஒழுக்கம் இருக்கிறது’ என்கிற விபரீதமான செய்தி நீண்ட காலமாகத் தமிழ் சினிமாவில் பதிவாகிக் கொண்டிருந்தது. இந்த மரபை உடைத்த படம் என்பதுதான் ஹைலைட்

K. பாலாஜி தயாரிப்பில் K.விஜயன் டைரக்ட் பண்ணி இருந்த விதியில் மோகன், பூர்ணிமா பாக்யராஜ், சுஜாதா,ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாய்ங்க / ஊஹூம் வாழ்ந்துருப்பாய்ங்க .

பொதுவா லவ் பண்ணி சந்தர்ப்ப வசத்தால் ஒரு பெண் கர்ப்பமாகி விட்டால் அந்த பெண் கதாபாத்திரத்தை கொன்று விடுவார்கள் நம் படைப்பாளிகள். அல்லது இந்த பெண்ணின் மகன் பிறந்து பெரியவனாகி பழி வாங்குவான், பெண்ணின் சகோதரன் பழி வாங்குவான். இதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணின் விதி என்று சொன்னது அன்றைய தமிழ் சினிமா.

அந்த விதியை மாற்ற முடியும் காதலனை குற்றவாளி கூண்டில் ஏற்றி பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு நியாயம் கிடைக்க செய்ய முடியும் என்று புதிய விதியை சொன்னது இப்படம். இது அன்றைய நாளில் மிக வியப்பாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்த போராட்டத்தை பாதிக்கப்பட்ட பெண்ணே முன்னெடுக்க முடியும் என்று கம்பீரமாக சொன்னது விதி.

சேலை மேல முள்ளு பட்டாலும், முள்ளு மேல சேலை பட்டாலும், சேலைக்கு தான் நஷ்டம் என பெண்கள் மீதான தமிழ் சினிமா வைத்த பிற்போக்கு கருத்துகளுக்கு சாட்டையடி தந்தது விதி. படத்தின் ரியல் ஹீரோ ஆரூர்தாசின் டயலாக்குகள்தான். கோர்ட்டில் பேசப்படும் வசனங்கள் முன்னரே சொன்னது போல் தியேட்டர் தாண்டி திருவிழாக்கள், இல்லங்கள் என பல பொது இடங்களில் ஒலித்தன.விதி படத்தின் கேசட்கள் அதிக அளவில் விற்றன.

நாயகன் ராஜாவாக மோகன். ராதாவாக பூர்ணிமா. ஒரு நாயகனும் நாயகியும் நடித்து தொடர்ச்சியாக ஹிட் அடிச்சால், அந்த ஜோடியை ராசியாகக் கருதுவது சினிமாவின் மரபு. அந்த வகையில் இந்த ஜோடி ஏகப்பட்டவெற்றித் திரைப்படங்களில் நடிச்சிருக்குது. அதிலும் ‘நைஸ் ஜென்டில்மேன்’ ரோலில் நடித்து ஏராளமான இளம்பெண் ரசிகர்களைப் பெற்ற மோகனுக்கு இதில் கொஞ்சம் நெகட்டிவ் ரோல் . பூர்ணிமாவைத் துரத்தித் துரத்திக் காதலித்து, தன் நோக்கம் நிறைவேறியவுடன் பணக்காரத் திமிரில் எகத்தாளமாகப் பேசி ஏமாற்றுவார். பார்வையாளர்களின் எரிச்சலைச் சம்பாதிப்பார்.

அழகு என்பதைத் தாண்டி பூர்ணிமா ஒரு நல்ல நடிகை என்பதற்கான தடயங்கள் இந்தப் படத்தின் சில காட்சிகளிலிருந்தன. தான் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி மனம் புழுங்குவது, குடும்பத்தின் எதிர்ப்பால் மனஉளைச்சல் அடைவது, தன் வாழ்க்கையைக் குலைத்தவனை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதற்காக மனஉறுதியுடன் இருப்பது என தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடிச்சிருந்தார்.

இதை எல்லலம் தாண்டி நீதியை எளிதில் அடைய முடியாத எளியவர்களுக்காக, குறிப்பாகப் பெண்களுக்காகப் போராடும் வழக்கறிஞராக சகுந்தலா தேவி. இது போன்ற கம்பீரமான, கண்ணியமான பாத்திரம் என்றால் சுஜாதாவிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழைத் துல்லியமாக உச்சரிப்பதற்கு அதிக முயற்சி எடுக்கும் நடிகைகளில் ஒருவர். “என்ன சார்... இப்படியொரு நல்ல தமிழில் எழுதியிருக்கீங்க. நான் எப்படிப் பேசி நடிப்பேன்... என்னால முடியுமான்னு தெரியல” என்று வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் சுஜாதா புலம்ப, ‘உன்னால் முடியும்’ தைரியமூட்டி நடிக்க வைச்சாய்ங்களாம். அந்தப் படத்தின் முதுகெலும்பே ‘சகுந்தலா தேவி’ பாத்திரம்தான். இதற்குத் தகுந்த நியாயம் செய்திருப்பார் சுஜாதா.

‘டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்’ அப்படீங்கற விஷயமே இப்போதைய ஜென் Z தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. இவிய்ங்க ஆன்ட்ராய்ட் போனில் ஒரு விரலால் தட்டச்சி அல்லது குரல் வழி பழகியவர்கள். ஆனா முறையான தட்டச்சுப் பயிற்சியைத் தருவதற்கு அப்போ ஏகப்பட்ட தட்டச்ச்ய் பயிற்சி நிலையங்கள் இருந்துச்சு. வேலைக்கு விண்ணப்பிக்க டைப்பிங் தெரிவது ஆதாரமான தேவையாக இருந்துச்சு. ஆனாலும் பதின்ம வயது இளைஞர்களுக்குத் தட்டச்சுப் பயிற்சியை விடவும் காதலுக்குத் தோதான இடமாக இந்த நிலையங்கள் இருந்துச்சு என்பது நெசம் . இந்தப் படத்தின் ஹீரோ ராஜாவும் இதைப் பயன்படுத்தி நமக்கே எரிச்சல் வரும் அளவுக்கு ராதாவுக்குக் காதல் இம்சை தருவான். பயிற்சி நிலைய உரிமையாளராக வரும் மனோரமா கலக்கி இருப்பார்

இப்படத்தின் கோர்ட் சீன்தான் முக்கியமான பலம். அதுவரை சுமாராப் போகும் காட்சிகள், நீதிமன்றத்தில் ஏற ஆரம்பித்ததுமே பரபரப்பாகி விடும். ஜெய்சங்கரும் சுஜாதாவும் மாறி மாறி தங்கள் தரப்பு வாதங்களைச் சுடச்சுட எடுத்து வைக்கும் காட்சிகளில் அனல் பறக்க்கும். நீதிமன்றத்தில் தனது பிளாஷ்பேக்கை உணர்ச்சிகரமாக சுஜாதா சொல்வது ஒரு நல்ல ட்விஸ்ட். ஆனால் இந்த நீதிமன்றக் காட்சிகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறதா என்று கேட்கக்படாது. ‘சினிமாட்டிக்’ அல்லது அந்தக் கால சினிமாவின் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ளோணும் .

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்கி, ஆண்களைக் காப்பாற்றும் அநீதி இன்றும் கூட தொடரும் நிலையில், தன்னை சீரழித்த அயோக்கியனைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தி துணிச்சலாகத் தண்டனை வாங்கித் தந்த கதை கொண்ட விதி -க்கு இன்னிக்கும் மவுசு உள்ளதை ஆந்தை குழுமம் நினைவு கொள்வதில் பெருமிதம் கொள்கிறது

K. பாலாஜி புரொடக்‌ஷனில் K.விஜயன் டைரக்ட் பண்ணி இருந்த விதியில் மோகன், பூர்ணிமா பாக்யராஜ், சுஜாதா,ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாய்ங்க / ஊஹூம் வாழ்ந்துருப்பாய்ங்க .

பொதுவா லவ் பண்ணி சந்தர்ப்ப வசத்தால் ஒரு பெண் கர்ப்பமாகி விட்டால் அந்த பெண் கதாபாத்திரத்தை கொன்று விடுவார்கள் நம் படைப்பாளிகள். அல்லது இந்த பெண்ணின் மகன் பிறந்து பெரியவனாகி பழி வாங்குவான், பெண்ணின் சகோதரன் பழி வாங்குவான். இதுதான் பாதிக்கப்பட்ட பெண்ணின் விதி என்று சொன்னது அன்றைய தமிழ் சினிமா.

அந்த விதியை மாற்ற முடியும் காதலனை குற்றவாளி கூண்டில் ஏற்றி பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு நியாயம் கிடைக்க செய்ய முடியும் என்று புதிய விதியை சொன்னது இப்படம். இது அன்றைய நாளில் மிக வியப்பாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்த போராட்டத்தை பாதிக்கப்பட்ட பெண்ணே முன்னெடுக்க முடியும் என்று கம்பீரமாக சொன்னது விதி.

சேலை மேல முள்ளு பட்டாலும், முள்ளு மேல சேலை பட்டாலும், சேலைக்கு தான் நஷ்டம் என பெண்கள் மீதான தமிழ் சினிமா வைத்த பிற்போக்கு கருத்துகளுக்கு சாட்டையடி தந்தது விதி. படத்தின் ரியல் ஹீரோ ஆரூர்தாசின் டயலாக்குகள்தான். கோர்ட்டில் பேசப்படும் வசனங்கள் முன்னரே சொன்னது போல் தியேட்டர் தாண்டி திருவிழாக்கள், இல்லங்கள் என பல பொது இடங்களில் ஒலித்தன.விதி படத்தின் கேசட்கள் அதிக அளவில் விற்றன.

நாயகன் ராஜாவாக மோகன். ராதாவாக பூர்ணிமா. ஒரு நாயகனும் நாயகியும் நடித்து தொடர்ச்சியாக ஹிட் அடிச்சால், அந்த ஜோடியை ராசியாகக் கருதுவது சினிமாவின் மரபு. அந்த வகையில் இந்த ஜோடி ஏகப்பட்டவெற்றித் திரைப்படங்களில் நடிச்சிருக்குது. அதிலும் ‘நைஸ் ஜென்டில்மேன்’ ரோலில் நடித்து ஏராளமான இளம்பெண் ரசிகர்களைப் பெற்ற மோகனுக்கு இதில் கொஞ்சம் நெகட்டிவ் ரோல் . பூர்ணிமாவைத் துரத்தித் துரத்திக் காதலித்து, தன் நோக்கம் நிறைவேறியவுடன் பணக்காரத் திமிரில் எகத்தாளமாகப் பேசி ஏமாற்றுவார். பார்வையாளர்களின் எரிச்சலைச் சம்பாதிப்பார்.

அழகு என்பதைத் தாண்டி பூர்ணிமா ஒரு நல்ல நடிகை என்பதற்கான தடயங்கள் இந்தப் படத்தின் சில காட்சிகளிலிருந்தன. தான் வஞ்சிக்கப்பட்டதை எண்ணி மனம் புழுங்குவது, குடும்பத்தின் எதிர்ப்பால் மனஉளைச்சல் அடைவது, தன் வாழ்க்கையைக் குலைத்தவனை சமூகத்துக்கு அடையாளம் காட்டுவதற்காக மனஉறுதியுடன் இருப்பது என தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடிச்சிருந்தார்.

இதை எல்லலம் தாண்டி நீதியை எளிதில் அடைய முடியாத எளியவர்களுக்காக, குறிப்பாகப் பெண்களுக்காகப் போராடும் வழக்கறிஞராக சகுந்தலா தேவி. இது போன்ற கம்பீரமான, கண்ணியமான பாத்திரம் என்றால் சுஜாதாவிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழைத் துல்லியமாக உச்சரிப்பதற்கு அதிக முயற்சி எடுக்கும் நடிகைகளில் ஒருவர். “என்ன சார்... இப்படியொரு நல்ல தமிழில் எழுதியிருக்கீங்க. நான் எப்படிப் பேசி நடிப்பேன்... என்னால முடியுமான்னு தெரியல” என்று வசனகர்த்தா ஆரூர்தாஸிடம் சுஜாதா புலம்ப, ‘உன்னால் முடியும்’ தைரியமூட்டி நடிக்க வைச்சாய்ங்களாம். அந்தப் படத்தின் முதுகெலும்பே ‘சகுந்தலா தேவி’ பாத்திரம்தான். இதற்குத் தகுந்த நியாயம் செய்திருப்பார் சுஜாதா.

‘டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்’ அப்படீங்கற விஷயமே இப்போதைய ஜென் Z தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. இவிய்ங்க ஆன்ட்ராய்ட் போனில் ஒரு விரலால் தட்டச்சி அல்லது குரல் வழி பழகியவர்கள். ஆனா முறையான தட்டச்சுப் பயிற்சியைத் தருவதற்கு அப்போ ஏகப்பட்ட தட்டச்ச்ய் பயிற்சி நிலையங்கள் இருந்துச்சு. வேலைக்கு விண்ணப்பிக்க டைப்பிங் தெரிவது ஆதாரமான தேவையாக இருந்துச்சு. ஆனாலும் பதின்ம வயது இளைஞர்களுக்குத் தட்டச்சுப் பயிற்சியை விடவும் காதலுக்குத் தோதான இடமாக இந்த நிலையங்கள் இருந்துச்சு என்பது நெசம் . இந்தப் படத்தின் ஹீரோ ராஜாவும் இதைப் பயன்படுத்தி நமக்கே எரிச்சல் வரும் அளவுக்கு ராதாவுக்குக் காதல் இம்சை தருவான். பயிற்சி நிலைய உரிமையாளராக வரும் மனோரமா கலக்கி இருப்பார்

இப்படத்தின் கோர்ட் சீன்தான் முக்கியமான பலம். அதுவரை சுமாராப் போகும் காட்சிகள், நீதிமன்றத்தில் ஏற ஆரம்பித்ததுமே பரபரப்பாகி விடும். ஜெய்சங்கரும் சுஜாதாவும் மாறி மாறி தங்கள் தரப்பு வாதங்களைச் சுடச்சுட எடுத்து வைக்கும் காட்சிகளில் அனல் பறக்க்கும். நீதிமன்றத்தில் தனது பிளாஷ்பேக்கை உணர்ச்சிகரமாக சுஜாதா சொல்வது ஒரு நல்ல ட்விஸ்ட். ஆனால் இந்த நீதிமன்றக் காட்சிகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறதா என்று கேட்கக்படாது. ‘சினிமாட்டிக்’ அல்லது அந்தக் கால சினிமாவின் சுதந்திரம் என்று எடுத்துக்கொள்ளோணும் .

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளிகளாக்கி, ஆண்களைக் காப்பாற்றும் அநீதி இன்றும் கூட தொடரும் நிலையில், தன்னை சீரழித்த அயோக்கியனைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தி துணிச்சலாகத் தண்டனை வாங்கித் தந்த கதை கொண்ட விதி-க்கு இன்னிக்கும் மவுசு உள்ளதை ஆந்தை குழுமம் நினைவு கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE