பிப்ரவரி 2026 மாத ராசி பலன் - கடகம்

By செய்திப்பிரிவு

புதன் மற்றும் சுக்கிரன் மட்டுமே பலம் பெற்றும் 8-ம் இடமான அஷ்ட ஸ்தானத்தில் ஒருசில நன்மைகளை வழங்குவார்
தொழில் போட்டிகள் குறையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

கோயில் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் கடன் சுமைகள் குறையும் பங்குசந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.

சூரியன் 7,மற்றும் 8'ம் இடங்களில் வலம் வருவதால் அரசாங்க பகைகள் வரக்கூடும் தந்தை மகனுக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகும் அரசியல் செல்வாக்கு குறையும் கௌரவம் இழப்பு தேவையில்லாத பிரச்சினைகள் மாட்டிக்கொள்வது வம்பு வழக்குகள் வரக்கூடும் கவனம்.

செவ்வாயும் ராசிக்கு 7 மற்றும் 8-ம் இடங்களில் சஞ்சாரம் செய்வதால் முன்கோபம் அதிகமாக காணப்படும் அவசர முடிவுகளால் பிரச்சனைகள் சந்திக்க நேரும் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் இரண்டாம் இடத்தில் கேதுவும் இருப்பதால் மனை நிலங்கள் வாங்கும் பொழுது பத்திர பதிவுகளை சரி பார்க்கவும் பங்காளிகளுக்குள் தேவையில்லாத மனஸ்தாபங்கள் வரக்கூடும் யாருக்கும் ஜாமின் கையெழுத்துக்கள் போடாதீர்கள்.

ஒன்பதாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் அன்னியமொழி காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு பனிச்சுமை அதிகமாக காணப்படும் உடல் ஆரோக்கிய குறைபாடும் காணப்படும் உணவு விஷயத்தில் கவனம் தேவை இயற்கை உணவுகளை உண்ணுங்கள்.வதந்திகளை நம்பாதீர்கள் தீர விசாரித்து முடிவுகள் எடுங்கள்.

12-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தொழில்களுக்காக புதிய முதலீடு எதையும் போடாதீர்கள் வரக்கூடிய வருமானம் வந்து கொண்டே இருக்கும் ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும் அபாயம் உள்ளது.

பிப்:17,18,19 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம்

பரிகாரம்:
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயத்தில் உள்ள நவகிரக நாயகர்களுக்கு அர்ச்சனை செய்து வரவும் பசுக்களுக்கு உணவளியுங்கள்
நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE