ஜோதிகா நக்மாவை எடுத்துக்கிட்டு Roshini என்ற தங்கத்தை நாம சினிமால இருந்து இழந்துட்டோம்.
என்னதான் அக்கா நக்மா ஓட recommendation ல Roshini , jyothika இவங்க ரெண்டு பேரும் வந்தாலும்.. ரோஷினிய மட்டும் தமிழ்ல கார்த்தி ஓட நடிக்க வச்சுட்டு... ஜோதிகாவுக்கு மட்டும் ஹிந்தில முதல் டிபியூட்... அப்புறம் தமிழ்ல முதல் படமே அஜித் கூட.
என்னங்க நியாயம் இது... அக்கா ஜோதிகா மூக்கு கொஞ்சம் பொடப்பா இருக்கும்... ஜோதிகா விட ரோஷினி மூக்கு நல்லாவே இருக்கும் இவங்களே வாலில் நடிச்சி இருக்கலாம்.
தமிழ்ல சிஷ்யா, துள்ளி திரிந்த காலம் ரெண்டு படம் தான் நடிச்சாங்க.
கே பாலச்சந்தர் production ல துள்ளி திரிந்த காலம் ஹிட் ஆயிடுச்சு.. மத்த லாங்குவேஜ்ல remake பண்ணாங்க.
இவங்க கதாபாத்திரம் முக்கியமா இருந்தா மட்டும்தான் நடிப்பாங்க அதனாலே நிறைய கிளாமர் ரோல் அவாய்ட் பண்ணாங்க.
ஜோதிகாவோட நேரம் வாலி கிளிக்கான மாதிரி இவங்களுக்கு நல்ல படங்கள் அமையல.
இவங்க நெப்போலியன் கூட சேர்ந்து நடிச்ச ஒரு படம் வேற பாதிலேயே நின்னுடுச்சு.
.
இப்ப சினிமா விட்டு விலகி வாழ்ந்தாலும் அப்பப்போ சூர்யா வீட்டு பங்க்ஷன்ல தலைய காட்டுறாங்க.