ராஜு வெட்ஸ் ரம்பை மூவி எப்படி இருக்கு?

By மினி சினி

ரொம்பவே காய்ந்து போயிருந்த தெலுங்கு சினிமாவுக்கு ஆக்ஸிஜன் கொடுத்த படமாய் இந்த படம் அமைந்தது. இந்த படமெல்லாம் ஓடும் என்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் நவம்பர் ரிலீஸுக்கு முன் இப்படத்தின் ஒரு பாடலும், டிரைலரும் கொஞ்சம் ஹைப் கொடுக்க, அதனால் கிடைத்த மைலேஜுல் இன்னொரு விஷயமும் இப்படக்குழுவினர்கள் செய்தார்கள். அதாவது சகாயவிலை டிக்கெட். சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டரில் ரு.99க்கும் மல்ட்டிப்ளெக்ஸுகளில் ரு.105க்கு டிக்கெட் விற்பனை செய்தார்கள். ஈடிவியின் தயாரிப்பு.

அதனால் ஆண்டிபைரசியில் படம் பார்க்க முடியாமல் கொஞ்சம் மெனக்கெட மலிவு விலையில் ஒரு நல்ல படம் என்றதும் மக்கள் தியேட்டருக்கு இழுத்து வந்தததில் டிக்கெட் விலையின் பங்கும் உண்டு. சுமார் 23 கோடி ரூபாய் தியேட்டர் கிராஸ் மட்டும் செய்திருக்கிறது. மொத்த பட்ஜெட்டே 2 கோடிக்குள் தான் என்கிறார்கள்.

கதை ஒரு கிராமத்து காதல் கதை. ராஜு ஒரு ஆந்திர கிராமத்து மேளம் அடிக்கும் இளைஞன். அவனது சிறு வயது கிரஷ் ரம்பை. இப்படி மோளம் அடித்து பொழைககாதே ஹைதராபாத் போய் வேலை செய்து செட்டில் ஆகும் என்று ராஜுவின் அப்பா சொல்லிக் கொண்டேயிருக்க, ரம்பையும் அவனுக்குமான காதல் செட்டிலானது முதல் அவன் போகவே மாட்டேன் என்றிருக்க, அதே நேரத்தில் ரம்பையின் அப்பா ஒரு மோசமான மனிதன். உள்ளூர் கவர்மெண்ட் ஆஸ்பிட்டலில் கம்பவுண்டராக வேலை செய்கிறவர். தன் பெண்ணை ஒரு கவர்மெண்ட் வேலை செய்கிறவனுக்குத்தன கட்டிக் கொடுப்பேன் என்று ஏற்கனவே போலியோ அட்டாக்கால் ஊனமுற்றிருப்பவர் மீதமுள்ள ஒன்றைக்காலில் நிற்கிறார்.

துர்குணன். கோபக்காரன். மற்றாவர்களை கொஞ்சமும் மதிக்காதவனாகிய அவனை எதிர்த்து கல்யாணம் செய்ய முடியாமல் போக, ஒரு கட்டத்தில் ரம்பை கர்ப்பமானால் திருமணம் செய்துவைப்பதை தடுக்க முடியாது என முடிவெத்துகர்ப்பமும் ஆகிறாள். ஆனால் அதன் பின் நடக்கும் சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகும் விஷயமாய் போய் அக்காதலுக்காக உருக வைத்துவிடுகிறார்கள்.

ரொம்பவே சிம்பிளான நடிப்பு. ராஜுவாக வரும் அகில் ராஜின் நடிப்பும் சரி. ரம்பையாக வரும் தேஜஸ்வி ராவின் நடிப்பும் சரி கச்சிதம். நடித்தவர்கள் எக்ஸெலெண்ட் என சொல்ல வைப்பவர் ரம்பையின் அப்பா வெங்கன்னாவாக வரும் சைத்து ஜொன்னாலகட்டாவின் நடிப்பு. இந்த படத்திற்கு அப்புறம் பல தெலுங்கு படங்களில் இவரை தவறாமல் பார்க்க வாய்ப்பு இருக்கு. குறிப்பாய் தன் மகளை ராஜுவுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவர் அந்த தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் நடிக்கும் சிங்கிள் ஷாட் காட்சி செம்ம.

சுரேஷ் பொப்பிலியின் சிம்பீளான பாடல்கள். மிக இயல்பான புன்னகைக்க வைக்கும் சின்னச் சின்ன கிராமத்து நகைச்சுவைகள். கிராமத்து இளைஞர்களுக்கே உரிய இன்னொசென்ஸ். எப்படியாவது கவர்மெண்ட் வேலை வாங்கிடுறேன் என்று வந்து சொல்லி கம்ப்யூட்டர் செண்டர் ஆளிடம் கவர்மெண்ட் வேலைக்கு என்ன படிச்சிருக்கணும் என்று கேட்க, அவரோ மினிமம் 10 என்று சொல்ல, அவன் ஏழு தான் படித்திருக்கிறேன் என்று சொல்லும் போது அந்த கம்ப்யூட்டர் இளைஞன் என்ன தம்பி ரிஷர்வேஷனெல்லாம் உனக்காகத்தானே வ்ச்சிருக்காங்க படிச்சிருக்கலாமில்ல என்று சொல்லுமிடமும். அது பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கும் காட்சி என ஆஙகங்கே இயக்குனர் சைலு கம்பெட்டி மிளிரிகிறார். இது உண்மைக்கதை என்று தெரியும் போது இன்னும் அதிர்ச்சுக்குள்ளக்குகிறது. டோண்ட் மிஸ் அதெல்லாம் சரி படம் பேரு என்னான்னுதானே கேக்குறீங்க. ராஜு வெட்ஸ் ரம்பை. Etv win ஒடிடியில் கிடைக்கிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE